சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு சகோதரர்கள் திருநங்கைகளைப் போலப் புடவை கட்டி, ஒப்பனை செய்து கொண்டு தெருக்களில் இறங்கி மக்களிடம் பணம் வசூலிக்கும் ஒரு சமூகப் பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர்.
வியக்கத்தக்க வகையில், இவர்களின் இந்த முயற்சியில் அவர்களின் தாயாரே அவர்களுக்கு ஒப்பனை செய்து உதவி செய்துள்ளார். சாலையில் செல்லும் மக்களிடமும் கடைக்காரர்களிடமும் கைதட்டிப் பணம் கேட்ட அந்த இளைஞர்கள், தாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக பணம் கிடைத்ததாகவும், “இந்தத் தொழில் நன்றாக இருக்கிறது” என்று நகைச்சுவையாகக் கூறுவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்ட இந்த 47 வினாடி வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர். இதைப் பார்த்த பல நெட்டிசன்கள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
“இப்படிப்பட்ட இளைஞர்கள் நாட்டிற்குத் தேவையில்லை” என்றும், “முதலீடு இல்லாமல் பணம் சம்பாதிக்க இது ஒரு சுலபமான வழியாகிவிட்டது” என்றும் மக்கள் காரசாரமாக விமர்சித்து வருகின்றனர்.
Nobody can copy this content!! 😭🤣 pic.twitter.com/4obCILtp5y
— Sunanda Roy 👑 (@SaffronSunanda) January 1, 2026
“>
கேலி மற்றும் சீரியஸான விவாதங்களுக்கு உள்ளாகியுள்ள இந்த வீடியோ, சமூகத்தில் திருநங்கைகளின் அடையாளத்தை இளைஞர்கள் விளையாட்டாகப் பயன்படுத்துவது குறித்த கவலையையும் தூண்டியுள்ளது.
