தமிழகத்தில் உள்ள 10-ம் வகுப்பு மாணவர்களின் கல்வித் திறனை ஊக்குவிக்கும் வகையில், ‘முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு’ குறித்த முக்கிய அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வில் சிறப்பாகச் செயல்பட்டுத் தகுதி பெறும் 1,000 மாணவர்களுக்கு, ஒரு கல்வியாண்டுக்குத் தலா 10,000 ரூபாய் வீதம் உயர்கல்வி வரை கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. வரும் ஜனவரி 31-ம் தேதி இந்தத் தேர்வு நடைபெற உள்ள நிலையில், இதற்கான விண்ணப்பப் படிவங்களை www.dge.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

​இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளை மறுநாளுடன் (டிசம்பர் 26) முடிவடைகிறது. எனவே, தகுதியுள்ள மாணவர்கள் காலதாமதம் செய்யாமல் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. மாணவர்களின் எதிர்காலத்திற்கும் உயர்கல்விக்கும் பேருதவியாக இருக்கும் இந்த அறிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பள்ளிக் கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.