உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் பகுதியில் சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் கதவு, எதிர்பாராதவிதமாகத் திடீரெனத் திறக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அந்தச் சாலையில் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கார் கதவின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த அதிர்ச்சிகரமான விபத்தில் பைக்கில் பயணித்த இருவர் தூக்கி வீசப்பட்டதில், ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

लापरवाही आपने की,जान हमारी गई..

फिरोजाबाद तेज रफ़्तार ने बाइक सवार एक व्यक्ति की ली जान चली गई,दरअसल इस घटना में कार चालक की बहुत बड़ी लापरवाही थी।राह चलते कार का दरवाजा खोलने के दौरान इन बातों का ध्यान रखें। pic.twitter.com/eEYsCzMQ9J

— Tushar Rai (@tusharcrai) June 5, 2026

நெஞ்சைப் பதறவைக்கும் இந்த விபத்தின் ஒட்டுமொத்தக் காட்சிகளும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், கார் ஓட்டுநரின் கவனக்குறைவா அல்லது பைக்கின் அதிவேகமா விபத்திற்குக் காரணம் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, சாலையில் வாகனங்களை நிறுத்தும்போது கதவுகளைக் கவனமாகக் கையாள வேண்டும் என்ற விழிப்புணர்வும், சாலை பாதுகாப்பு குறித்த விவாதங்களும் நெட்டிசன்கள் மத்தியில் மீண்டும் வலுவாக எழுந்துள்ளன.