மத்தியப் பிரதேச மாநிலம் சிவ்னி மாவட்டத்தில் உள்ள பகோரி கிராம அரசு மேல்நிலைப் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வாங்கச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த கிருஷ்ணகுமார் நாயக் என்ற ஆசிரியர், மாணவியிடம் பகல் நேரத்திலேயே அநாகரிகமான முறையில் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த ஒட்டுமொத்த கொடூரச் செயலும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் அப்படியே பதிவாகியுள்ளது. பயந்துபோன மாணவி வீட்டிற்குச் சென்று பெற்றோரிடம் கதறி அழுததை அடுத்து, இந்த விவகாரம் காவல்துறைக்கு கொண்டு செல்லப்பட்டது.
मध्यप्रदेश के सिवनी जिले के बखाली गांव से एक शर्मनाक मामला सामने आया है। एक छात्रा परीक्षा का प्रवेश पत्र लेने गई थी, जहां शिक्षक “कृषण कुमार नायक” पर अनुचित व्यवहार करने का आरोप लगा है और घटना CC TV में रिकॉर्ड हुई। छात्रा ने घर पहुंचकर परिजनों को घटना की जानकारी दी, जिसके बाद… pic.twitter.com/sirg8G1k3n
— Ilyas (@Ilyas_SK_31) June 5, 2026
இதற்கிடையே, ஆசிரியர் மாணவியிடம் தவறாக நடக்கும் அந்த சிசிடிவி வீடியோ காட்சிகள் ‘எக்ஸ்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அதிரடியாகச் செயல்பட்ட போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அந்த ஆசிரியரை உடனடியாகக் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அந்த ஆசிரியர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
