துருக்கியின் மெர்சின் மாகாணத்தில் உள்ள அனமூர் நகரில், பள்ளிக்கு மின்சார மிதிவண்டியில் வந்ததற்காகக் கண்டித்த பள்ளி முதல்வர் மீது 12 வயது மாணவன் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் முதல்வர் விடுத்த எச்சரிக்கையால் ஆத்திரமடைந்த அந்த மாணவர், பள்ளி நேரத்தில் வளாகத்திற்குள் நுழைந்து 39 வயதான பள்ளி முதல்வரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுள்ளார்;
<a href=”http://

“>
இதில் படுகாயமடைந்த அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மாணவனையும் அவனது தந்தையையும் காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், பாதுகாப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை நடைபெற்று வருவதால் அப்பள்ளியில் வகுப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.