உலகிலேயே மிக நீளமான பெயரைக் கொண்ட இடம் எது தெரியுமா? நியூசிலாந்தின் ‘ஹாக்ஸ் பே’ (Hawke’s Bay) பகுதியில் உள்ள ஒரு மலை தான் அது. “Taumatawhakatangihangakoauauotamateaturipukakapikimaungahoronukupokaiwhenuakitanatahu” என்ற 85 எழுத்துக்கள் கொண்ட இந்தப் பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது.
உச்சரிக்கவே மூச்சு முட்டும் என்பதால், உள்ளூர் மக்கள் இதனை சுருக்கமாக ‘தௌமடா மலை’ (Taumata Hill) என்று அழைக்கிறார்கள். மாஓரி (Maori) மொழியில் அமைந்துள்ள இந்தப் பெயரின் பின்னால் ஒரு சுவாரஸ்யமான காதலும், வீரமும் கலந்த வரலாறு ஒளிந்துள்ளது.
The longest place name in the world is in New Zealand
pic.twitter.com/wXDmxIFg5o— Science girl (@sciencegirl) December 21, 2025
இந்தப் பெயரின் அர்த்தம் என்னவென்றால், “பெரிய முழங்கால்களைக் கொண்ட, மலைகளை விழுங்குபவர் என்று புகழப்பட்ட மாவீரர் தமாடியா (Tamatea), தான் நேசித்தவருக்காக புல்லாங்குழல் வாசித்த இடத்தின் உச்சி” என்பதாகும்.
305 மீட்டர் உயரமுள்ள இந்தச் சிறிய மலையின் அடிவாரத்தில் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பெயர் பலகை, தற்போது உலகப் பயணிகளின் ஃபேவரைட் போட்டோ ஸ்பாட்டாக மாறியுள்ளது.
குறிப்பாக, இந்த இடத்தைச் சுற்றியுள்ள நகரங்களில் இந்தியர்களுக்குப் பிடித்த சைவ உணவு வகைகள் தாராளமாகக் கிடைப்பதால், நியூசிலாந்து செல்லும் இந்தியச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
