இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ள ஒரு காணொளி பார்ப்பவர்களைச் சிரிக்க வைத்துள்ளது. பொதுவாக மனிதர்கள் தங்களுக்குள் ‘பிராங்க்’ (Prank) செய்து விளையாடுவதைப் பார்த்திருப்போம். ஆனால், இந்த வீடியோவில் ஒரு முதலையையே பிராங்க் செய்துள்ளனர். ஏரிக்கரையில் ஒரு மான் குனிந்து தண்ணீர் குடிப்பது போன்ற தத்ரூபமான உருவப் படத்தை (Cutout) யாரோ வைத்துள்ளனர். அதைப் பார்த்த ஒரு முதலை, அது நிஜமான மான்தான் என்று நம்பிவிட்டது.
வேட்டையாடும் ஆசையில் அந்த மானை பலமுறை பிடிக்க முயற்சி செய்கிறது. ஆனால், அது வெறும் அட்டைப் படம் என்று தெரியாமல் அந்த முதலை காட்டும் ஆர்வம் பார்ப்பவர்களுக்கு வேடிக்கையாக உள்ளது. இந்த விசித்திரமான காணொளி தற்போது வைரலாகி வரும் நிலையில், “முதலையையே இப்படி ஏமாத்திட்டீங்களே” என்றும், “அந்த முதலையின் நிலைமையைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது” என்றும் நெட்டிசன்கள் கிண்டலாகக் கருத்துப் பகிர்ந்து வருகின்றனர்.
