உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் அருகே உள்ள ஒரு கிராமத்தில், ‘அம்பானி விவசாயி’ என்று அழைக்கப்படும் ஒருவரின் பிரம்மாண்ட வீடு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சுமார் 20 பிகா பரப்பளவில் அரண்மனை போல கட்டப்பட்டுள்ள இந்த வீட்டில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 35 பேர் ஒன்றாக வசித்து வருகின்றனர்.

பொதுவாக விவசாயிகள் என்றாலே கஷ்டப்படுபவர்கள் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் இருக்கும் நிலையில், இந்த விவசாயியின் வீட்டில் விலையுயர்ந்த கார்கள் முதல் குதிரைகள் வரை அனைத்தும் இருப்பதை ஒரு வீடியோ பிளாக்கர் தனது வீடியோவில் காட்டியுள்ளார்.

சுமார் 14 சகோதரர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகள் என அனைவரும் ஒரே கூரையின் கீழ் ஒற்றுமையாக வாழும் இந்த வீடு, அந்தப் பகுதியிலேயே மிகப்பெரியது என்று கூறப்படுகிறது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட சில நாட்களிலேயே 70 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Kisaan Yodha (@kisan_yoddha_ki_videos)

“>

இந்த பிரம்மாண்ட வீட்டைப் பார்த்த பலரும் வியந்து போயுள்ளதுடன், தங்கள் ஊர்களிலும் இது போன்ற பெரிய வீடுகள் இருப்பதாகக் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். இந்தத் தகவல் இணையத்தில் இப்போது பேசுபொருளாக மாறியுள்ளது.