உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாகரில் சாலையில் அமைதியாகச் சென்றுகொண்டிருந்த காளையை முதியவர் ஒருவர் கல்லால் அடித்ததையடுத்து, ஆத்திரமடைந்த அந்த விலங்கு அவரைத் தாக்கிய அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
<a href=”http://

“>
கடந்த செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 16) நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், மேக்ராஜ் சிங் என்ற முதியவர் சாலையில் சென்ற காளையை திடீரென கல்லால் தாக்கியுள்ளார்; இதனால் சினம் கொண்ட காளை அவரை விரட்டிச் சென்று முட்டியதில் அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார்.

தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், விலங்குகளிடம் தேவையற்ற ஆக்ரோஷத்தைக் காட்டுவது ஆபத்தானது என எச்சரிக்கும் வகையில் இந்த காணொலி அமைந்துள்ளது.