ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ஒருவர், தொகுதி மேம்பாட்டு நிதி (MLA-LAD) திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க 40% கமிஷன் கேட்பது ‘ஸ்டிங் ஆபரேஷன்’ (Sting Operation) மூலம் அம்பலமாகியுள்ளது. அரசியல் வட்டாரத்தில் நீண்டகாலமாகப் பேசப்பட்டு வந்த இந்த கமிஷன் விவகாரம், தற்போது ஆதாரத்துடன் வீடியோவாக வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

​உதாரணமாக, ஒரு கிராமத்திற்கு 1 கோடி ரூபாய் மதிப்பிலான சாலைத் திட்டம் அறிவிக்கப்பட்டால், அதில் 40 லட்சம் ரூபாயை எம்.எல்.ஏ முதலிலேயே எடுத்துக் கொள்கிறார். மீதமுள்ள 60 லட்சத்தில் அரசு அதிகாரிகள், இடைத்தரகர்கள் மற்றும் ஒப்பந்ததாரரின் லாபம் எனப் பல கைகள் மாறுகிறது.

இறுதியில் வெறும் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வேலை மட்டுமே நடப்பதால், அந்தச் சாலைகள் சில மாதங்களிலேயே பழுதாகி விடுகின்றன. சீனாவில் இது போன்ற ஊழல்களுக்கு மரண தண்டனை வரை வழங்கப்படுவதைச் சுட்டிக்காட்டும் மக்கள், இந்தியாவில் இன்னும் முதல் தகவல் அறிக்கை (FIR) கூட பதிவு செய்யப்படாதது குறித்து வருத்தம் தெரிவித்து வருகின்றனர்