கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் சார்பில் நடந்த மாநில மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். மாநாடு முடிந்து அவர் காரில் புறப்பட்டபோது, வழியில் நின்று கொண்டிருந்த கடலூர் கிழக்கு மாவட்ட திமுக வர்த்தக அணி நிர்வாகி ரங்கன் என்பவர், சீமானின் காரை வழிமறித்து தகாத வார்த்தைகளால் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த சீமானின் ஆதரவாளர்கள் மற்றும் சீமான் ஆகியோர் சேர்ந்து திமுக நிர்வாகி ரங்கனை சரமாரியாகத் தாக்கியதால் அங்குப் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, நாம் தமிழர் கட்சியினர் திமுக நிர்வாகி ரங்கனைக் கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

“>

 

மேலும், விருத்தாசலம் காவல் நிலையத்திலும் இது தொடர்பாகப் புகார் மனு அளிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது.