தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியான புஸ்ஸி ஆனந்த் பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்றுப் பேசுகையில், தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தக்கூடிய மாபெரும் அரசியல் குண்டு ஒன்றை உடைத்துள்ளார். இன்னும் மூன்றே மூன்று மாதங்களில் திமுக கண்டிப்பாக பிஜேபியுடன் கூட்டணி சேர்ந்துவிடும் என்றும், வேண்டுமானால் இதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள் என்றும் அவர் அதிரடியாகக் கணித்துள்ளார். அதற்கான வேலைகளில் திமுகவினர் ஏற்கனவே தயாராகிவிட்டதாகவும், இனிவரும் காலங்களில் அவர்களால் இங்கே எதுவுமே செய்ய முடியாது என்றும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
தொடர்ந்து பேசிய புஸ்ஸி ஆனந்த், தமிழகத்தின் எதிர்கால அரசியல் இலக்கு குறித்து திட்டவட்டமான பிரகடனம் ஒன்றை வெளியிட்டார். இனிவரும் 20 வருட காலத்திற்கு தங்களது தலைவர் தளபதி விஜய் அவர்கள் தான் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக இருப்பார் என்றும், அதில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்றும் அவர் மேடையில் முழங்கினார். புஸ்ஸி ஆனந்தின் இந்த அதிரடி அரசியல் கணிப்பு மற்றும் தவெக-வின் 20 ஆண்டுகால ஆட்சிப் பிரகடனம் தற்போது சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
