வியட்நாமின் ஹனோய் நகரில் உள்ள உலகப் புகழ்பெற்ற ‘டிரெயின் ஸ்ட்ரீட்’ உணவகம் ஒன்றிற்கு இந்திய தம்பதியினர் உணவருந்தச் சென்றுள்ளனர். அங்கு அந்த பெண், தான் ஆர்டர் செய்த உணவு முற்றிலும் சைவ உணவுதானா (Vegetarian), அதில் கறி, மீன் அல்லது முட்டை எதுவும் சேர்க்கப்படவில்லையா என அங்கிருந்த வியட்நாம் சர்வரிடம் திரும்பத் திரும்பக் கேட்டு உறுதிப்படுத்தியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதும், “சாப்பாட்டு விஷயத்தில் அந்த ஊழியரை ஏன் இவ்வளவு டார்ச்சர் செய்ய வேண்டும், நம்பிக்கையில்லை என்றால் அங்கு போயிருக்கக் கூடாது” எனப் பலரும் அந்த இந்தியப் பெண்ணைக் கடுமையாக விமர்சித்தனர்.

​ஆனால், நெட்டிசன்களின் இந்த விமர்சனங்களுக்கு அந்த வியட்நாம் சர்வர் இணையத்திலேயே நேரடியாக வந்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார். “அவர் தன் உணவை உறுதி செய்து கொள்ள நினைத்தது முற்றிலும் சாதாரணமான விஷயம், இதில் எனக்கு எந்த தொந்தரவும் இல்லை; கஸ்டமர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதே எங்கள் கடமை” என அந்த இந்தியப் பெண்ணிற்கு ஆதரவாக அவர் பதிவிட்டுள்ளார். கஸ்டமரின் பயத்தைப் புரிந்து கொண்டு, அவருக்கு ஆதரவாகப் பேசிய அந்த வியட்நாம் ஊழியரின் பெருந்தன்மைக்கு தற்போது சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.