ஓடும் ரயிலில் இருந்து குப்பைகளை வெளியே வீசிய துப்புரவு ஊழியரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பொதுமக்களின் கோபத்தை தூண்டியுள்ளது. நாட்டில் தூய்மை மற்றும் அழகுக்காக அரசு மற்றும் ரயில்வே நிர்வாகம் கோடிக்கணக்கில் செலவிடும் நிலையில், இந்தச் செயல் ‘ஸ்வச் பாரத் அபியான்’ திட்டத்தை கேலி செய்வது போல் உள்ளது.
देश की धड़कन कहे जानी वाली रेल में स्वच्छता अभियान @RailMinIndia @Central_Railway pic.twitter.com/bcKjBXvQeI
— Ashok Shera (@ashokshera94) November 28, 2025
“>
இந்த வீடியோவில், துப்புரவு ஊழியர் ஒருவர், ரயிலின் பெட்டியில் உள்ள குப்பைகள் மற்றும் அழுக்குகளை வைப்பர் (Wiper) உதவியுடன் ரயிலின் கதவருகே நின்று வெளியே வீசுகிறார். இந்த பொறுப்பற்ற செயலைப் பார்த்த சமூக ஊடகப் பயனர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பலர் அந்த ஊழியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது ரயில் பெட்டியை சுத்தப்படுத்துவது அல்ல, குப்பையிலிருந்து விடுபடுவது என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார்.
