உத்தரப் பிரதேசம் மாநிலத்தில், ஜாலாபூர் உள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் மாணவர்கள் தாக்கப்பட்டதோடு, அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வியாழக்கிழமை நடந்த இச்சம்பவம், வெள்ளிக்கிழமை ஒரு காணொளி வெளியான பிறகு பொது கவனத்திற்கு வந்தது.
பள்ளியின் விரிவுரையாளரும், உறைவிடப் பொறுப்பாளருமான ராஜேந்திர ஆர்யா ஒரு குச்சியுடன் வரிசையாக நிற்கும் மாணவர்களைத் தாக்குவதும், ஒரு மாணவனைப் பிடித்து, அவன் முதுகில் குத்துவதும், கன்னத்தில் அறைவதும் காணொளியில் பதிவாகியுள்ளது. தாக்குதலுக்குள்ளான மாணவர்களில் 6, 7 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்கள் அடங்குவர்.
பொறுப்பாளர் ஆர்யா மாணவர்களைத் தொடர்ந்து அடித்து, இழிவுபடுத்துவதாகப் பல மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர், மேலும் கால் வீங்கியிருந்த ஒரு மாணவரைக்கூட 100 முறை தோப்புக்கரணம் போட வைத்ததாகவும் கூறப்படுகிறது.
In the residential school at Jhalrapatan (Jhalawar), the teacher lines up every student and beats—and even forces some children into the degrading rooster position.
The real question is: what gives him the right to brutalize an entire class? Is this blatant abuse simply his way… pic.twitter.com/xk5E3sVwzY
— Oxomiya Jiyori 🇮🇳 (@SouleFacts) November 29, 2025
“>
இருப்பினும், பொறுப்பாளர் ராஜேந்திர ஆர்யா இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து, ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதற்காக மாணவர்களைப் பயமுறுத்த மட்டுமே குச்சியைப் பயன்படுத்தியதாகவும், தண்டனை கொடுத்ததாகவும் ஒப்புக்கொண்டார்.
தலைமை நிர்வாக அதிகாரி ஷம்புதயாள் மீனா, காணொளியை ஆய்வு செய்து, தவறிழைத்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
