உலகம் முழுவதும் உணவு பழக்கங்களில் வித்தியாசங்கள் காணப்படும் நிலையில், சிலரின் செயல்கள் பலரையும் அதிர்ச்சியடையச் செய்கின்றன. இது போன்ற அதிர்ச்சி தரும் ஒரு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. வீடியோவில், ஒரு நபர் உயிருடன் உள்ள ஆக்டோபஸை நேரடியாக வாயில் போட்டுச் சாப்பிடும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
இந்த வீடியோவை ஒரு பயனர் தனது (X) பதிவிட்டுள்ளார். 1 நிமிட நீளமான இந்தக் காணொளி தற்போது வரை 1.2 கோடி முறை (12 மில்லியன்) பார்வைகள் பெற்றுள்ளது. மேலும் 50,000-க்கும் மேற்பட்டோர் இந்தக் காணொளியை விருப்பமாகும் பட்டியலில் சேர்த்துள்ளனர்.
வீடியோவில், ஒருவர் தனது கையில் ஒரு நத்தையைப் பிடித்துக் கொண்டிருப்பது தெரிகிறது. பின்பு, அவர் ஒரு திரவத்தை (liquid) பாட்டிலில் இருந்து நத்தையின் உள்ளே ஊற்றுகிறார். அந்த திரவத்தின் தாக்கத்தால், உள்ளே இருந்த ஒரு சிறிய ஆக்டோபஸ் வெளியில் வரத் தொடங்குகிறது. அதனைப் பார்த்தவுடன், அந்த நபர் உயிருடன் இருக்கும் ஆக்டோபஸை நேரடியாக வாயில் வைத்து மென்று சாப்பிடுகிறார்.
I want him in jail before 6pm today 🤧🤧 pic.twitter.com/M5oqzqT73B
— The Instigator (@Am_Blujay) September 7, 2025
காட்சியில், அந்த சிறிய ஆக்டோபஸ் உயிர் காக்க துடிக்கிறது. இருப்பினும், அந்த நபர் அதில் எந்த இரக்கத்தையும் காட்டாமல், அதை முழுவதுமாக விழுங்குகிறார்.
இந்த சம்பவத்தின் பிறகு, அவர் மீண்டும் அதே திரவத்தை நத்தைக்குள் ஊற்றுகிறார். மற்றொரு ஆக்டோபஸ் உள்ளே இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், அதையும் எடுத்துச் சாப்பிட முயற்சிக்கிறார். இந்த வீடியோ வைரலான பிறகு, இணையவாசிகள் பலர் கோபம், வியப்பு மற்றும் விரக்தி ஆகியவற்றுடன் தங்கள் எதிர்வினைகளை பதிவு செய்து வருகின்றனர்.
