டெல்லி மெட்ரோவில் மீண்டும் ஒரு சண்டை சம்பவம் இடம் பெற்றுள்ளது. இதில் இருவர் இடையே நடந்த மோதல் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பொதுமக்கள் அதிகம் பயணிக்கும் டெல்லி மெட்ரோவில், சமீபகாலமாக வெவ்வேறு வீடியோக்கள் வெளியாகி, சமூக ஊடகங்களில் பரவலாக பரவி வருகின்றன. சில வீடியோக்களில் நடனம், பாடல் போன்ற செயற்பாடுகள் பதிவாகியுள்ளன; சிலவற்றில் பயணிகளிடையே ஏற்படும் தகராறுகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் தற்போது, இருவர் இடையே ஏற்பட்ட கடும் சண்டையின் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மெட்ரோவில் பயணிகள் அமைதியாக அமர்ந்திருக்கும் சூழலில், ஒருவர் மற்றொருவரை செருப்பால் தாக்கும் காட்சி தெளிவாக பதிவாகியுள்ளது. முதலில், ஒருவர் எதிரில் நிற்பவரை நோக்கி சென்று, தனது செருப்புகளை கழற்றி முகத்தில் அடிக்கிறார். இதனால் ஏற்பட்ட கோபத்தில், தாக்கப்பட்ட நபர், அவரை கடுமையாக அறைந்ததுடன், கழுத்தைப் பிடித்து கீழே தள்ளுகிறார்.
दिल्ली मेट्रो में आज फिर आपका स्वागत है
आज अलग ही तरीका का अखाड़ा चालू किया गया है,आप सभी भाई आराम से देखे सबको
हंसने का मौका भरपूर दिया जाएगा। pic.twitter.com/M3QWs5aDrg— Shoaib Khan (@adv_soyyab) September 10, 2025
இதனுடன், அந்த வீடியோவின் தொடர்ச்சியில், மற்றொரு சண்டையும் காணப்படுகிறது. அது பழையதா அல்லது அதே நிகழ்வின் மற்றொொரு பகுதியா என்பது குறித்து உறுதி செய்யப்படவில்லை. இந்த காணொளியை @adv_soyyab என்ற சமூக ஊடக பயனர் தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “இன்று மீண்டும் டெல்லி மெட்ரோவிற்கு வருக! இப்போது ஒரு புதிய அரங்கம் தொடங்கியுள்ளது. சகோதரர்களே, தயவுசெய்து வசதியாக அமருங்கள் அனைவருக்கும் சிரிக்க போதுமான வாய்ப்பு அளிக்கப்படும்” என விவகாரமான வகையில் குறிப்பிட்டுள்ளார்.
