காதலித்த ஒரு ஜோடி, குடும்பத்தின் எதிர்ப்பை எதிர்கொண்டு வீட்டை விட்டு தப்பியோடி, ஒரு கிராமத்தில் ஒளிந்துள்ளனர். அந்த காதலர்களை ஊர்மக்கள் புரிந்து கொண்டு திருமணம் நடத்தி வைத்துள்ள சம்பவம், தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக வைரலாகி வருகிறது. அதாவது பீகார் மாநிலம் பாகல்பூரை சேர்ந்த சிவம் மற்றும் சபௌர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோட்டி சர்தா கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஆகிய இருவரும் கடந்த ஒரு ஆண்டாக காதலில் இருந்துள்ளனர். இவர்களின் உறவை எதிர்த்த இருவரது குடும்பத்தினரும் திருமணத்திற்கு சம்மதிக்க மறுத்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த ஜோடி, சமீபத்தில் வீட்டை விட்டு தப்பி ஓடி, சன்ஹௌலா பகுதியில் உள்ள மருத்துவமனை அருகே ஒளிந்து இருந்தனர். இந்த தகவல் அப்பகுதி கிராம மக்களிடம் தெரியவந்ததும், அவர்கள் இருவரிடமும் நேரில் சென்று விசாரித்தனர். இருவரும் ல், விருப்பப்படி காதலித்து, திருமணம் செய்ய முடிவு செய்ததாக தெரிவித்தனர்.
இதையடுத்து, அந்த கிராம மக்கள், பாபா போலேநாத் கோவிலில் இந்து மரபின்படி திருமண ஏற்பாடுகளை செய்தனர். அவர்களுக்கு இந்து முறைப்படி திருமணம் நடத்தப்பட்டது. மணமகன், மணமகளுக்கு பக்கபலமாக ஊர்த் தலைவர்கள், பொதுமக்கள் அனைவரும் நின்றனர். கோவிலில் திருமணத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் கிராமவாசிகளால் செய்யப்பட்டன.
இந்த திருமணத்திற்கு பிறகு அந்த பெண் “நான் எதற்கும் கட்டாயப்படுத்தப்படவில்லை. விருப்பத்துடன் என் காதலருடன் திருமணம் செய்து கொண்டேன். எனக்கு, என் கணவருக்கும் அல்லது அவரது குடும்பத்தினருக்கும் ஏதாவது நேர்ந்தால், அதற்குப் பொறுப்பு என் சொந்த குடும்பம் தான். என் மாமா என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்.” என்றார். மேலும் இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக வைரலாகி வருகிறது. இதுகுறித்த புகார் சன்ஹௌலா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
