தெருநாய்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் சமீபத்தில் வெளியிட்டுள்ள உத்தரவின் பின்னணியில், சமூக வலைதளங்களில் நாய்கள் தொடர்பான வீடியோக்கள் பெரும் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இந்த நிலையில், டெல்லி-என்.சி.ஆர் பகுதியில் பதிவான ஒரு சிசிடிவி வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதில், ஒரு நபர் நாய் குரைத்ததனால் பயந்து சாலையில் ஓடிச் சென்றபோது, வேகமாக வந்த லாரி ஒன்று அவர் மீது மோதிய அதிர்ச்சிகரமான காட்சி பதிவாகியுள்ளது.

சமூக ஊடகத்தில் ஒரு பயனர் பகிர்ந்த இந்த வீடியோவில், சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்த நபருக்கு எதிரே, சத்தமாக குரைக்கும் ஒரு தெருநாய் திடீரென கடிப்பது போல நடந்து கொள்கிறது. இதனால் அந்த  நபர் பயந்து, நாய் தாக்கக்கூடும் என்ற எண்ணத்தில் சாலையை கடக்க முயற்சிக்கிறார்.

 

அந்த நேரத்தில் எதிர்புறத்திலிருந்து வேகமாக வந்த ஒரு லாரி அந்த நபரை மோதி சென்று விடுகிறது. இதில் நபர் இடத்தில்‌வே காயமடைந்து விழும் காட்சியும் காணப்படுகிறது. வீடியோவில் உள்ள தகவல்படி, லாரி ஓட்டுனர் உடனடியாக வாகனத்தை நிறுத்தியிருப்பது ஒரு சிறிய நற்செயலாகக் கருதப்படுகிறது.

மேலும் வெறும் 11 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ தற்போது 4 லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கான மக்கள் லைக் செய்து, தங்கள் கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.