மும்பை மெட்ரோவில் நடந்த ஒரு இதயத்தைத் தொடும் காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது. மெட்ரோ லைன் 2ஏ-வில் உள்ள மோதிலால் ஓஸ்வால் மெட்ரோ நிலையத்தில் ஒரு நாய் அமைதியாக உட்கார்ந்திருக்கும் புகைப்படம் பயணிகளையும் இணையவாசிகளையும் கவர்ந்தது. ஒரு எக்ஸ் (முன்பு ட்விட்டர்) பயனர் இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து, “இவனுக்கு மெட்ரோ டிக்கெட் கிடைக்கவில்லை, அதனால் முகத்தைத் தொங்கவிட்டு உட்கார்ந்திருக்கிறான். யாராவது இவனுக்கு டிக்கெட் கொடுங்கள், இவனும் போகட்டும் – நாய் பிரியர், மும்பை, மலாட் வெஸ்ட்” என்று குறிப்பிட்டிருந்தார். நாய் பயணத்துக்கு காத்திருப்பது போல் நிலையத்தில் அமைதியாக உட்கார்ந்திருப்பது பார்ப்பவர்களை நெகிழ வைத்தது.
We inquired with this furry friend and got to know he had actually come to meet a friend who works in our canine squad. Our 30 canine squad members work hard to keep our trains safe for commuters.#DogSquad #CanineSquad #Security #MahaMumbaiMetro #MumbaiInMinutes #MMRDA50… https://t.co/atR46zSzLt
— Maha Mumbai Metro Operation Corporation Ltd (@MMMOCL_Official) September 8, 2025
இந்தப் புகைப்படம் இணையத்தில் பரவியதும், மகா மும்பை மெட்ரோ ஆபரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் (MMMOCL) செவ்வாய்க்கிழமை ஒரு அழகான விளக்கத்துடன் பதிலளித்தது. “இந்த நாயுடன் பேசியதில், அது தனது நண்பரை, எங்கள் நாய் பாதுகாப்பு குழுவில் பணிபுரியும் ஒருவரை சந்திக்க வந்தது தெரியவந்தது. எங்கள் 30 நாய் குழு உறுப்பினர்கள் பயணிகளின் பாதுகாப்புக்காக கடினமாக உழைக்கின்றன,” என்று அவர்கள் நகைச்சுவையாகப் பதிவிட்டனர். இந்த சம்பவம் மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்ததோடு, மெட்ரோவில் பணிபுரியும் நாய்களின் பங்களிப்பையும் நினைவு படுத்தியுள்ளது.
