பிரபல இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘முதல்வன்’ திரைப்படத்தில் நடிகர் விஜய் நடிக்கவிருந்ததாகவும், சில தேதிகள் மற்றும் சூழ்நிலை காரணமாக அப்படத்தின் வாய்ப்பு நழுவிப் போனதாகவும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது விவாதங்கள் எழுந்து வருவது வழக்கம்.

இதுகுறித்து இயக்குநர் ஷங்கர் அளித்த பழைய பேட்டி ஒன்று தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.

அந்தப் பேட்டியில், விஜய்யின் தந்தை சந்திரசேகர் அவர்கள் தன்னிடம் நேரடியாகப் பேசாமல், வேறு ஒரு நபர் மூலமாகப் பேசியதே இந்தப் படம் கைநழுவிப் போவதற்குக் முக்கியக் காரணமாக அமைந்தது என்பதை ஷங்கர் வெளிப்படையாக விளக்கியுள்ளார்.

ரசிகர்கள் பலரும் நடிகர் விஜய் இந்தப் படத்தில் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து விவாதித்தாலும், உண்மையான காரணத்தை இயக்குநர் அப்போது சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும், திரையுலகில் தன் இயல்பான தயக்கத்தைப் போக்குவது குறித்தும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னிடம் எப்படி அன்போடு நடந்து கொண்டார் என்பதையும் அவர் அந்தப் பேட்டியில் நினைவு கூர்ந்துள்ளார்.

“>

 

யாருடைய வழியிலும் போய் பேசுவது பிடிக்காத தன் சுபாவத்தினால் ரஜினிகாந்திடமே பேசத் தயங்கி நின்றதாகவும், ஆனால் ரஜினியே தன் தேடி வந்து அன்பாகப் பேசிய அந்த நிகழ்வு தனது தயக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியமைத்ததாகவும் ஷங்கர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.