இந்தியாவின் மிகப்பெரிய குற்றவாளிகளில் ஒருவர் லாரன்ஸ் பிஷ்னோய். இவர் மீது கொலை, மிரட்டல், துப்பாக்கிச்சூடு, ஏராளமான வழக்குகள் இருக்கின்றன. குறிப்பாக, பஞ்சாப் பாடகர் சித்து மூசேவாலா கொலைக்கு பின், அவரைப் பற்றி நாடு முழுக்க பேச ஆரம்பித்தது. தற்போது அவர் மீண்டும் பேசும் பொருளாக மாறியுள்ளார். ஆனால் இந்த முறை, அவரது குற்றச்சாட்டுக்காக அல்ல.

 

சமீபத்தில், டெல்லி கிழக்கு மாவட்டம் போலீஸ் துணை ஆணையர் அபிஷேக் தானியா ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். இதில், ஒரு நகைக்கடைக்கு 25 லட்சம் ரூபாய் வசூலிக்க முயன்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இதைப் பற்றி பேசும் போது, “அந்த மிரட்டல் தொடர்பான கால் ரெக்கார்ட்ஸ் மற்றும் மெசேஜ்களில் லாரன்ஸ் பிஷ்னோய் ஐயா-னு சொன்னாங்க” என்று அதிகாரி பேசிய வீடியோ வைரலாகி இருக்கிறது.

இதைக் கண்ட நெட்டிசன்கள், “ஒரு குற்றவாளியை, போலீஸ் அதிகாரி ‘ஐயா’னு மரியாதையாக கூறுவது என்ன நீதி?” என்று கண்டனம் தெரிவிக்கிறார்கள். “அவனை பார்த்தால் போலீசுக்கு கூட பயமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.