ஜம்மு-காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சல்பிரதேசம் போன்ற மலைப்பகுதிகளில், தற்போது மழை பெய்தாலே மேக வெடிப்பு, மலைச்சரிவு மாதிரி பேரழிவுகள் நடக்கிறது. ஆனால் பலரும் உயிரிழக்கின்றனர் மற்றும் பல வீடுகளும் சேதம் அடைந்து வருகிறது. இந்நிலையில் ஒரு மலை இடிந்து விழும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
पहाड़ों में बादल फटना हो या बरसात में बाढ़ का आना हो, ऐसे में सावधानी की जरूरत होती है, परन्तु सूखे पहाड़ भी गिर जाते हैं जिसमें भारी नुकसान हो जाता है प्रकृति का एक भयानक रूप ये भी होता है, आपको हर स्थिति में सावधान रहना चाहिए। pic.twitter.com/LeWCRMPzTN
— जिद्दी लड़का💕 (@Activist_07) August 26, 2025
இந்த வீடியோவில், மரத்தால் செய்யப்பட்ட பாதையில் மக்கள் நடக்கிறார்கள். அதற்குள், ஒரு பெரிய பாறை திடீரென உடைந்து விழுகிறது. அதற்குப் பின், ஒரே நேரத்தில் பல பாறைகள் கீழே விழுவதும், மக்கள் அங்கேயே ஓடி தப்பிக்க முயற்சிப்பதும் காட்டப்படுகிறது. இதைப் பார்க்கும் போது இது நிஜமான ஒரு பயங்கர சம்பவமாக இருக்குன்னு தோணும். ஆனால், இது AI கொண்டு உருவாக்கப்பட்ட வீடியோ என்பதால் யாருக்கும் பாதிப்பு இல்லாமல் காட்டப்பட்டுள்ளது.
இந்த வீடியோ @Activist\_07** என்ற X கணக்கில் வெளியிடப்பட்டுள்ளது. 10 நொடிகள் மட்டுமே உள்ள இந்த வீடியோ, 2 லட்சத்திற்கு மேல் பார்வைகள் பெற்றுள்ளது. நெட்டிசன்கள், “இது போல நிகழ்ச்சிகள் உண்மையாவே நடக்கக்கூடும், அதனால நாம எப்போதும் பாதுகாப்பாக இருக்கணும்”ன்னு கருத்து தெரிவிக்கிறார்கள்.
