உத்தரகாண்ட் மாநிலம் சம்பாவத் மாவட்ட சிறப்பு அதிரடிப்படையில் காவலராகப் பணியாற்றி வந்த கிரிஷ் பட் (38), கடந்த வெள்ளிக்கிழமை அன்று உள்ளூரில் உள்ள ஒரு ஜிம்மில் வழக்கம்போல உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்குத் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு நிலைகுலைந்து தரைமட்டமாகச் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது. உடற்பயிற்சி கூடத்தில் தீவிரமாகப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோதே, கண் இமைக்கும் நேரத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு அவர் சுருண்டு விழுந்ததைக் கண்டு அங்கிருந்தவர்கள் மற்றும் உடற்பயிற்சி நிலைய ஊழியர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
@AjitSinghRathi बनबसा में शुक्रवार को जिम में व्यायाम कर रहे उत्तराखंड पुलिस के SOG जवान गिरीश भट्ट की अचानक तबीयत बिगड़ने से मौत हो गई। अस्पताल पहुंचने पर चिकित्सकों ने उन्हें मृत घोषित कर दिया। प्रारंभिक तौर पर हृदय गति रुकने को मौत का कारण माना जा रहा है। pic.twitter.com/fOcHpst9Dx
— RK VERMA (@RKVERMA11641781) June 20, 2026
காவலர் கிரிஷ் பட் திடீரென சுருண்டு விழுந்து உயிரிழக்கும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த காவலர் கிரிஷ் பட்டிற்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மைக்காலமாக இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதுடையவர்கள் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்போது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்தச் சம்பவம் காவல்துறையினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
