ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதன் தலைவர் மோகன் பகவத் பங்கேற்றார்.

நிகழ்வின் போது பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “ஆர்.எஸ்.எஸ். அனைவருக்கும் சம பணியை வழங்கும் அமைப்பு. பாஜகவுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், மோதல் எதுவும் இல்லை. பாஜகவின் முடிவுகளை எடுப்பது ஆர்.எஸ்.எஸ். அல்ல. எங்கள் பங்கு பரிந்துரைகள் அளிப்பது மட்டுமே. நாட்டை வழிநடத்துவது பாஜகவே. அதில் நிபுணர்கள் பாஜகவில் தான் உள்ளனர்,” எனத் தெரிவித்தார்.

மேலும், கடந்த நிகழ்ச்சியில் 75 வயதானவர்கள் ஓய்வுபெற வேண்டும் என்ற அவரது பேச்சு பிரதமர் மோடியை குறிவைத்து வழங்கப்பட்டது என்ற சர்ச்சைகள் எழுந்தது தொடர்பாகவும் விளக்கம் அளித்தார். “75 வயதானால் ஓய்வுபெற வேண்டும் என நான் ஒருபோதும் கூறியதில்லை,” என அவர் தெளிவுபடுத்தினார்.

இதன்மூலம் அவரது முந்தைய பேச்சு குறித்த கருத்து வேறுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததாகவும், தேசிய அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திய கருத்துக்கு தற்போது தெளிவான விளக்கம் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.