சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் வெளியான கார் ஓட்டுனரின் காணொளி பார்ப்போரை கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அந்தக் காணொளியில் ஓட்டுநர் ஒருவர் தான் ஓட்டி வந்த காரை சாலையின் நடுவே நிறுத்துகிறார். பின்னர் தன் கையில் வைத்திருந்த சாண்ட்விச்சை ருசித்து சாப்பிட துவங்குகிறார்.
அந்த சமயத்தில் பின்னால் இருந்து வந்த மற்றொரு கார் இவரது காரின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியான நிலையில் சாண்ட்விச் சாப்பிடுவதற்காக காரை சாலையில் நிறுத்தினாரா என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. மேலும் சிலர் உணவு மீது அவருக்கு இருந்த விருப்பம் குறித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
View this post on Instagram
