சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் வெளியான ஒரு காணொளி பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தக் காணொளியில், ஒரு நபர் இருசக்கர வாகனத்தில், இருபுறமும் அடர்ந்த காடு போன்று இருக்கும் ஒரு சாலையில் பயணித்து கொண்டிருக்கிறார். அப்போது, அவருக்கு முன்னால் ஒரு ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருக்கிறது.

பயணத்தின்போது, அந்த நபர் தனது வலப்பக்கத்தில் பார்த்தபோது, அங்கு ஒரு சிங்கம் அவரை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. இதைப் பார்த்து பயந்த அந்த நபர் முன்னாள் சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் ஓரமாக மறைந்து வர் சென்று சிங்கத்திடமிருந்து தப்பித்தார். இந்த சம்பவம் பார்ப்பவர்களை பதைபதைக்க வைத்தது.

இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிய நிலையில், பலரும் ஆம்புலன்ஸ் இல்லையென்றால், அந்த நபர் சிங்கத்தின் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கலாம் என்று தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த சம்பவம், காட்டுப் பகுதிகளில் பயணிக்கும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்துகிறது.