இணையத்தில் எப்போது யார் வைரலாகிப் போவார்கள் என்று கணிக்க முடியாத அளவுக்கு, ஒரு  வீடியோ இப்போது சமூக வலைதளங்களை வெகுவாக கலக்கி வருகிறது.

ஊதா நிற சேலையில் ஒளிரும் அந்த திருநங்கை, ஓடும் ரயிலில் பயணிகளிடம் பணம் கேட்கும் காட்சி மட்டுமல்லாமல், அவருடைய அழகும் சாயலும் நெட்டிசன்களின் கவனத்தை கவர்ந்துவிட்டது. இதன் காரணமாக சிலர் அவரை “ரயில் ராணி” என்றும், சிலர் “சொர்க்கத்தின் அப்சரா” என்றும் அழைத்து கொண்டாடுகிறார்கள்.

இந்த வீடியோவில், பொதுப் பெட்டியில் பயணிக்கிற அந்த திருநங்கை, ஒவ்வொரு பயணியிடமும் பணம் பெறுகிற காட்சியுடன், ஒரு இளைஞர் அவளிடம் பணம் கொடுத்து ஆசீர்வாதம் பெறுகிறான். பின்னர், அந்த இளைஞன் கேமராவை பார்க்கும்மாறு  கூறும் போது,  புன்னகையுடன் நேராக பார்த்து சென்றுவிடுகிறார். இந்த சின்ன சிறகடிக்க வைக்கும் பார்வை  நெட்டிசன்களின் இதயங்களை கொள்ளை கொள்ள வைத்துள்ளது. அவரின் எளிமையும், கவர்ச்சியான பாவனைகளும் பலருக்குப் பிடித்துப் போயுள்ளன.

 

View this post on Instagram

 

A post shared by জানু ভাই (@classy_boy_sahil_2k)

“>இந்த வீடியோ @classy_boy_sahil_2k என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆகஸ்ட் 16 அன்று பகிரப்பட்டது. மூன்று நாட்களில் 6 கோடியே 20 லட்சத்துக்கும் மேல் பார்வைகளைப் பெற்றுள்ளது. 15 லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். கருத்துப் பகுதியில், “நீங்கள் தவறான தொழிலில் இருக்கீங்க, நிச்சயமாக ஒரு கதாநாயகி மாதிரி இருக்கீங்க”, ” என்றெல்லாம் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

பலரால் அவர் திருநங்கை என்பதே நம்ப முடியவில்லை என்பது மட்டுமல்லாமல், அவரது அழகும் நாணமும் உணர்ச்சியும் இணையத்தில் உண்மையிலேயே ஒரு ‘இன்டர்நெட் க்ரஷ்’ ஆக அவரை உயர்த்தியுள்ளது.