ராஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மீர் பகுதியில் யாரும் எதிர்பாராத அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்குள்ள ஒருவர் தனது காரை ஸ்டார்ட் செய்ய நினைத்தபோது, கார் எஞ்சினில் இருந்து சத்தம் கேட்டதால் உடனடியாக காரின் ஹூட் (bonnet)  திறந்துள்ளார். அதில் என்ன இருந்திருக்கிறது தெரியுமா? ஒரு பெரிய இந்திய பைதான் பாம்பு சுருண்டு கிடந்தது! அந்த பெரிய  பாம்பு எஞ்சின் பகுதியில் நுழைந்து அமைதியாக சுருண்டு படுத்திருந்தது.

சம்பவ இடத்துக்கு வந்த “ஸ்நேக் ஹெல்பைன்” எனும் தன்னார்வ குழுவினர், அந்த பாம்பை பாதுகாப்பாக மீட்க பல மணி நேரம் போராடி வெற்றிபெற்றனர். இந்த பரபரப்பான காட்சி வீடியோவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுபோன்ற நிலைமை வாகன ஓட்டிகள் அனைவருக்கும் எச்சரிக்கையாக இருக்கிறது. காரணம், வெப்பத்தையும் பாதுகாப்பையும் தேடி வனவிலங்குகள் கார்களில் புகுந்துக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

“>

 

இதைப் பார்த்த நெட்டிசன்கள், “சாதாரணமா  கார் ஸ்டார்ட் செய்யணும் அப்படின்னா இப்பவே என்ஜின  ஆய்வு பண்ணனும் போல!” என கலகலப்புடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒருபுறம் பாம்பு பாதுகாப்பாக மீட்கப்பட்டது என்ற நிம்மதி இருந்தாலும், இது போல் நிகழும் நிகழ்வுகள் அனைவரையும் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வைக்கின்றன.