மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள காஸ்பா பகுதியில், சினிமா வாய்ப்பு என்ற பெயரில் ஒரு மாடல் பெண் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் வெளியாகியுள்ளது.
2023ஆம் ஆண்டு சமூக வலைதளத்தில் பழகிய இரு நபர்கள், ‘நாங்கள் பாலிவுட், கொல்கத்தா திரையுலக தயாரிப்பாளர்கள்’ என கூறி, அந்த பெண்ணை சினிமா வாய்ப்பு தருகிறோம் என ஆசை வார்த்தைகள் கூறி மோசடி செய்ததோடு, பல்வேறு இடங்களில் அழைத்துச் சென்று பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து 24 வயதான அந்த மாடல், ஆகஸ்ட் 18 அன்று இரவு காவல்துறையை தொடர்பு கொண்டு புகார் அளித்தார். தான் பாதிக்கப்பட்ட சம்பவத்தை கூறிய அந்த பெண் , “திரைப்பட வாய்ப்பு தருவதாக நம்பவைத்து, என்னை இடம் பல இடங்கள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர். என்னை திரையுலக பிரபலங்களிடம் சந்திக்க வைப்பதாக கூறியும் ஏமாற்றினர். ஆனால், பின்னர் என்னைத் தவிர்த்து ஒதுக்க ஆரம்பித்தனர்,” என்று தெரிவித்தார்.
தற்போது இந்தக் வழக்கை மிகக் கவனமாக கையாண்டுள்ள போலீசார், இருவரும் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களது அடையாளங்கள் உறுதி செய்யப்பட்டதும் கைது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்யும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. திரையுலகத்தின் பெயரைக் கொண்டு பெண்ணை ஏமாற்றிய இந்த சம்பவம் கொல்கத்தா மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
