அமெரிக்காவின் டெக்ஸாஸ் (Texas) மாகாணத்தில் உள்ள ஃபிரிஸ்கோ (Frisco) நகரமன்றக் கூட்டத்திற்கு வெளியே, இந்திய வம்சாவளியினரின் குடியேற்றத்திற்கு எதிராக அங்கிருந்த நபர் ஒருவர் இந்தியத் தேசியக் கொடியைக் கிழித்து எறிந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ பதிவு இடம் பெற்றுள்ளது. எச்-1பி (H-1B) விசா மூலம் அமெரிக்காவிற்குள் இந்தியர்கள் அதிக அளவில் குடியேறுவதற்குக் கண்டனம் தெரிவிப்பதாகக் கூறி, அந்த நபர் இந்தியக் கொடியை அவமதித்த விவகாரம் இணையத்தில் தற்பொழுது பெரும் சர்ச்சையையும் இந்திய மக்கள் மத்தியில் கடுமையான கொந்தளிப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

இது அமேரிக்கா மட்டுமல்லாமல் உலகின் பல பகுதிகளில் இந்தியர்கள் மீதான இந்த வன்மம் சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. இனவெறி என்பது ஒரு சிலருக்குள் ஊறி இருப்பது ஒருபுறம் இருந்தாலும், சொந்த நாட்டில் இப்போது போன்றே அந்நிய நாட்டிலும் குடிமை உணர்வு (civic sense ) இல்லாமல் நடந்து கொள்வது முகம் சுழிக்க செய்து இந்தியர்களை வெறுக்க வைக்கிறது. தற்போது இதை அடிப்படை காரணமாக வைத்து இந்தியர்களை சொந்த நாட்டிற்கு திரும்பி செல்லுமாறு பல விதமான போராட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் கூறவேண்டுமெனில், அவர்கள் சுற்றுலா பயணிகளாக கூட இந்தியர்கள் தங்கள் நாட்டிற்கு வருவதை விரும்புவதில்லை என கூறப்படுகிறது.