சென்னை புளியந்தோப்பில் உள்ள அரசுப் பள்ளி திறப்பு விழாவில், ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) சட்டமன்ற உறுப்பினர் பல்லவியை, எதிர்க்கட்சியான திமுக-வைச் சேர்ந்த சென்னை மாநகராட்சி மேயர் பிரியா திட்டமிட்டு புறக்கணித்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் தீயாய் பரவி வருகிறது. விழாவின் போது ரிப்பன் வெட்டும் முக்கிய தருணத்தில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ பல்லவியை பின்னால் நிற்க வைத்ததாகவும், குத்துவிளக்கு ஏற்றும்போதும் அவரைத் தவிர்க்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தால் கடும் அதிர்ச்சியடைந்த டி.வி.கே எம்.எல்.ஏ பல்லவி, “ஆட்சியில் நாங்க இருந்தாலும், இது முழுக்க முழுக்க எதிர்க்கட்சியின் அதிகார ஆணவத்தின் உச்சகட்ட செயல்” என செய்தியாளர்களிடம் உணர்ச்சிப்பொங்கத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால், இந்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு மேயர் பிரியா முற்றிலும் மறுப்பு தெரிவித்து, அரசு நெறிமுறைகளின்படியே அனைத்தும் நடந்ததாக விளக்கம் அளித்துள்ளார்.
விளக்கேற்ற மெழுகுவர்த்தியை கொடுக்காத மேயர் பிரியா.. கோபப்பட்டு வெளியே சென்ற தவெக எம்எல்ஏ பல்லவி#MayorPriya | #MLAPallavi | #Chennai | #TVK | #DMK pic.twitter.com/XuJsKUQL6H
— PttvOnlinenews (@PttvNewsX) June 4, 2026
அரசு புரோட்டோகால் விதிமுறைகளின்படி, இதுபோன்ற அதிகாரப்பூர்வ விழாக்களில் முதலாவதாக மேயருக்கும், இரண்டாவதாக மாநகராட்சி ஆணையருக்கும், அதன்பின்பே சட்டமன்ற உறுப்பினருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இருப்பினும், தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைத்துள்ள டி.வி.கே மற்றும் எதிர்க்கட்சியான திமுக இடையேயான இந்த அதிகார மோதல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
