விருதுநகரில் உள்ள ராஜபாளையம் ஆவாரம்பட்டி பகுதியில் நாகசெந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாக அட்சயா(19) என்ற மகள் இருக்கிறார். இவர் சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் சமூக வலைத்தளத்தில் அதிக நேரம் செலவிடுவது கூறப்படுகிறது.
அதன்படி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் அவருக்கு கர்நாடகாவைச் சேர்ந்த லிவின்(22) என்ற வாலிபர் அறிமுகமாகியுள்ளார். வழக்கம்போல் நட்புடன் தொடங்கியவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது. நாக அட்சயாவை காதலிப்பதாகவும் திருமணம் செய்ய விரும்புவதாகவும் லிவின் வலைதள பதிவில் கூறியுள்ளார்.
இதையடுத்து கர்நாடகாவிற்கு செல்ல நாக அட்சயா முடிவு செய்தார். மேலும் இந்த விஷயங்களை பெற்றோருக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டார். இதற்கிடையில் அவரது காதலன் “நீ இங்கு வந்தால் உடனடியாக திருமணம் செய்து கொள்ளலாம்”. ஆனால் தங்குவதற்கு வீடு எதுவும் இல்லாததால் வீடு பார்த்து விட்டு அழைத்து செல்வதாக கூறியுள்ளார்.
மேலும் வீடு பார்ப்பதற்கு பணம் தருமாறு கேட்டு இருந்தார். இதை நம்பிய அட்சயா காதலனை கர்நாடகாவில் இருந்து ராஜபாளையம் வரவழைத்து தனக்காக பெற்றோர்கள் செய்து வைத்திருந்து 25 பவுன் நகையை எடுத்துக் கொடுத்துள்ளார். ஆனால் இந்த பணம் போதவில்லை. மேலும் ரூ.50,000 வேண்டும் என்று கேட்க காதலனின் பேச்சில் சந்தேகம் ஏற்பட்டு மீண்டும் ராஜபாளையத்திற்கு வந்த அந்த பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.
இதற்கிடையில் லிவின் குறித்து அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். லிவின் வருகைக்காக காத்திருந்த காவல்துறையினர் திட்டமிட்டபடி அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் 25 பவுன் நகை தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
