திருச்சி மாவட்டம் கீழ குன்னபட்டியைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர் லாரி டிரைவராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி கிருத்திகா. இவர்களது வயலில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக சிவகுமாருக்கும் அவரது பெரியப்பா ஜோதிவேல் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
ஜூன் 29ஆம் தேதி கிருத்திகா வயலுக்கு தண்ணீர் பாய்ச்சிய போது ஜோதிவேல் வாக்குவாதம் செய்து கிருத்திகாவை தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த கிருத்திகா துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். பின்னர் துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதேபோல ஜோதி வேலும் சிவகுமார் கிருத்திகா மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பான விசாரணைக்கு வருமாறு துறையூர் சப் இன்ஸ்பெக்டர் சஞ்சீவி கிருத்திகாவை காவல் நிலையத்திற்கு அழைத்து உனக்கு எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன். நீ எனது ஆசைக்கு இறங்க வேண்டும். இல்லை என்றால் உன் மனுவை விசாரிக்காமல் அலைக்கழிப்பேன் என கூறியதாக தெரிகிறது.
இதனால் கிருத்திகா அழுது கொண்டே வீட்டிற்கு வந்து தனது கணவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு விஷயத்தை கூறியுள்ளார். மேலும் இது பற்றி கிருத்திகா எஸ்.பி அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருத்திகா இரண்டு நிமிடத்திற்கு மேல் எஸ் ஐ சஞ்சீவி மீது குற்றம் சாட்டி பேசும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது
