மத்திய பிரதேசம் பெதூல் ரயில் நிலையத்தில் போபால்-நாக்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றது. அந்த ரயிலில் ராகேஷ் குமார் ஜெயின் என்ற வயதானவர் பயணித்துக் கொண்டிருந்தார். ரயில் பெதூல் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் நின்று கொண்டிருந்தபோது அதிலிருந்து இறங்கிய ராகேஷ் குமார் ரயில் நிலையத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த நிலையில் மொபைலை பார்த்துக் கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் ரயில் புறப்பட்டதை ராகேஷ் குமார் கவனிக்கவில்லை. திடீரென ரயில் நகர்வதை அறிந்த அவர் ஓடி சென்று ரயிலில் ஏற முயற்சி செய்தார். ஆனால் எதிர்பாராத விதமாக கை தவறி கீழே விழுந்து விட்டார். அவரது உடல் சக்கரங்களுக்கு மிக அருகில் சென்ற போது அருகில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர் சத்யபிரகாஷ் ராஜூர்கர் என்பவர் ராகேஷ் குமாரை இழுத்து காப்பாற்றினார்.

இந்த சம்பவம் அனைத்தும் தற்போது வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த வீடியோவை RPF துறையானது “சிறந்த விழிப்புணர்வும், வேகமான நடவடிக்கையும் இந்த உயிரை காப்பாற்றியதற்கான முக்கிய காரணங்கள் என்றும், ரயில்வே நிலையங்களில் மொபைல் போனில் மூழ்காதிர்கள்..விழிப்புணர்வே பாதுகாப்பு…” என்று எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.

மேலும் ராஜேஷ் குமார் தற்போது மருத்துவமனையில் நலமுடன் இருக்கும் நிலையில் இந்த சம்பவத்தால் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது .