கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி அருகே பள்ளுருத்தி பகுதியை சேர்ந்தவர் லிஜியா(30). இவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் இருந்து கொச்சிக்கு போதைப் பொருட்களை கடத்தும் கும்பலில் மிக முக்கியமானவர் என்றும், அவர் தற்போது கேரளாவிற்கு போதை பொருள் கடத்தி வந்துள்ளதாகவும் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின் பெயரில் காவல்துறையினர் தைக்கூடம் பகுதியில் உள்ள விடுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள அறையில் லிஜியா போதைப் பொருள் கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதனை அடுத்து அறை முழுவதும் சோதனை நடத்தியதில் 23 கிராம் எடை கொண்ட எம்டிஎம்ஏ போதை பொருள் மருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் இதுகுறித்து லிஜியாவிடம் விசாரணை நடத்தப்பட்டு அவரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் எர்ணாகுளம் முதல் வகுப்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இதனை அடுத்து லிஜியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.