புதிதாக நாம் தமிழர் கட்சியில் இணையும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு கூட்டம்  நம்மளை  திராவிடம்,  திராவிடம் என  சொல்லிச்சு. அது ஒரு பெரும் கொள்ளை கூட்டம். அது நீண்ட காலமா இல்லாத ஒரு தத்துவத்தை கற்பித்து,  யாரு திராவிடம் என தெரிஞ்சு ஒரு வாக்கு ஓட்டு போடுவது… யாரும் வாக்கு செலுத்துவது இல்லை.

ஓட்டுக்கு 500 ரூபாய் கொடுக்கிறான்,  வாங்கிட்டு ஓட்டு போடுறான்…  இதுல எத்தனை பேரு திராவிட தத்துவத்துக்காக நாங்க ஓட்டு போடுறோம்னு சொல்லுறது  யாரு ? கருணாநிதி,  ஜெயலலிதா பேசும்போது காசு கொடுக்கவில்லை என்று கூட்டத்துக்கு ஆள் வரல. அவ்வளவு பெரிய தலைவர்கள்…  இப்ப தம்பி உதயநிதி,  ஸ்டாலின் ஐயா பேசும்போது சேலம் மாநாட்டில் 100 ஏக்கர்ல மாநாடு,  100 கோடி செலவு என சொன்னீங்க… ஒரு பயலும் இல்ல… 

எல்லாம் போய்ட்டான்…  காசு கொடுத்து தான் கூட்டிட்டு  வந்தாங்க. ஆனால் கடை மூடிடுவாங்க அல்லவா…  ஒன்பது மணிக்கு குவாட்டர் மூடிடுவான்.   கடைய மூடிடுவான், அதனை  போய்ட்டான். அன்றைக்கெல்லாம் நல்லிரவுல எனக்கு ரெண்டு தம்பி செய்தி அனுப்புறான். அண்ணா குவாட்டருக்கு 20 ரூபாய் ஏத்திட்டாங்க….  அண்ணனா  இதுக்கு ஒரு குரல் கொடுத்து விடு என்று சொல்கிறான்…   சிரிக்கிறதா ? அழுவுறதா ?  நல்லிரவில் அனுப்புறான். அப்பதான் போதை தெளிந்திருக்கும் போல…  சூழல் அப்படி ஆயிடுச்சு என தெரிவித்தார்.