செய்தியாளர்களிடம் பேசிய கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்,  தமிழகம் முழுவதும் ஒவ்வொரு பகுதிகளிலும் வரக்கூடிய 5ஆம்  தேதி மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதி மகளிர் அணி மாநாடு நடக்க இருக்கிறது. ஒவ்வொரு இடங்களிலும்,  மகளிர் அணியை பலப்படுத்துவது…  வரக்கூடிய தேர்தலுக்கு அவர்களை தயார் செய்வது என்று, தீவிரமாக இங்கே மகளிர் அணி இயங்கிக் கொண்டிருக்கிறது.

நாடு முழுவதுமே இது மாதிரியான பல்வேறு நிகழ்வுகள்,  மகளிர் அணிக்காக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதிக்கு உட்பட்ட,  ஒவ்வொரு தொகுதிக்குட்பட்ட,  மகளிர் அணி நிர்வாகிகளுடைய சந்திப்பு…  அதற்குப் பின்பாக மாநில அளவிலான கூட்டம்…. இன்னும் பல்வேறு இடங்களில் மாநில அளவிலே மிகப்பெரிய மகளிர் மாநாடுகள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

உத்தரகாண்ட், குஜராத், மகாராஷ்டிரா போன்ற இடங்களில் எல்லாம் லட்சக்கணக்கான மகளிர் கூடுகின்ற மாநாடுகளை ஏற்பாடு செய்து கொண்டு வருகிறார்கள். இந்த பாராளுமன்ற தேர்தலில் அதிகமான மகளிர் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிப்பதை உறுதி செய்வதற்காக பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.

ஏற்கனவே பல்வேறு சட்டமன்ற தேர்தல்களில் அதிகமான மகளிர் வாக்களிப்பதை  இப்போதும்  பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த அதிகமான மகளிர் வாக்களிப்பதன் காரணமாக,  அரசியலில் மகளிர் உடைய மகளிர் பங்களிப்பை மேம்படுத்த முடியும்….  அதன் வாயிலாக அரசியலிலும் சரி,  சமூகத்திலும் சரி..  மிக நல்ல மாற்றங்களை கொண்டு வர முடியும் என நாங்கள் நம்புகிறோம்.   எங்களுடைய பணி என்பது  வரக்கூடிய காலத்தில் இன்னும் தீவிரமாக இருக்கும் என தெரிவித்தார்.