உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ரெபேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இதற்காக அவர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அதில் தன்னுடைய சொத்து மதிப்பு குறித்த விவரங்களை குறிப்பிட்டிருந்தார். அதன்படி அவருக்கு ரூ‌.20 கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்பு உள்ளது.

இதில் ரூ.3 கோடியே 81,33,872 மதிப்புள்ள பங்குகள், ரூ.26,25,157 வங்கி இருப்பு, ரூ.15,21,740 தங்க பத்திரங்கள், ரூ.9 கோடியே 24,59,264 மதிப்புள்ள ஆசையும் சொத்துக்கள் உள்ளது. அதன்பிறகு தற்போதைய மதிப்பின்படி ரூ‌.11 கோடியே 15,02,598 மதிப்புள்ள அசையா சொத்துக்கள் உள்ளது. அதோடு அவருடைய கையில் தற்போது ரூ.55,000 உள்ளதோடு, ரூ.49,79,154 கடன் இருக்கிறது. மேலும் கடந்த நிதி ஆண்டில் அவருடைய மொத்த வருமானம் 2 கோடியே 2,78,680 ரூபாய் ஆகும்.