தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் இன்று நடைபெற்ற விவாதத்தில் பாமகவின் சட்டசபை குழு தலைவர் சவுமியா அன்புமணி கலந்துகொண்டு, விவசாயிகளின் கடன் சுமை மற்றும் தற்கொலைகள் குறித்து மிகவும் உருக்கமான மற்றும் அதிரடியான கோரிக்கைகளை முன்வைத்து உரையாற்றினார். தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான கடன் பிரச்சினை காரணமாக, நாட்டை காக்கும் விவசாயிகள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலை நீடித்து வருவதாக அவர் பேரவையில் மிக அழுத்தமாக சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசிய சவுமியா அன்புமணி, தமிழக அரசு விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடியை ஒரு அரசாங்க செலவாகவோ அல்லது நஷ்டமாகவோ பார்க்கக் கூடாது என தவெக அரசுக்கு மிக முக்கிய அட்வைஸ் வழங்கினார். மேலும், எந்தவித நிபந்தனைகளும் அல்லது வரம்புகளும் இல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையான பயிர்க்கடனை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என முதலமைச்சர் விஜய் அவர்களின் தலைமையிலான புதிய அரசுக்கு சவுமியா அன்புமணி சட்டமன்றத்தில் விடுத்த இந்த அதிரடி கோரிக்கை பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
