தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இருந்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் அதிகாரப்பூர்வமாக வெளியேறுவதாக அக்கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் அதிரடியாக அறிவித்துள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் இக்கூட்டணியின் ஓர் அங்கமாகப் போட்டியிட்ட தமமுக, இனி கூட்டணியில் தொடராது என்றும், இதுவரை நீடித்தது ஒரு நட்பு ரீதியிலான தொடர்பே தவிர, இன்றிலிருந்து கூட்டணியில் தமமுக இல்லை என்றும் அவர் செய்தியாளர்களிடம் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
