பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எசனை கிராமத்தில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு ராமாயி என்ற மனைவி உள்ளார். இந்த மூதாட்டி தனது வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாலிபர்கள் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் வந்து மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
வீட்டு வாசலில் நின்ற மூதாட்டி…. கைவரிசை காட்டிய வாலிபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!
Related Posts
கிரீன் சிக்னல் காட்டிய பெற்றோர்..! ஆனாலும் கல்யாணம் நடக்கல… 26 வயதில் திருமண ஆசை… காதலி வீட்டில் பிணமான வாலிபர்… நடந்தது என்ன..?
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அடுத்த பகுதியைச் சேர்ந்தவர் தீபக் (26). பொறியியல் பட்டதாரியான இவர், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கும், அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவருக்கும் ‘இன்ஸ்டாகிராம்’ சமூக வலைத்தளம்…
Read more“இந்த குழந்தை எனக்கு பிறக்கல”… நீ யாருக்கோ பெத்திருக்க… சந்தேகத்தால் மல்லு கட்டிய கணவன்… தலைக்கேறிய வெறியால் 9 மாத பிஞ்சு குழந்தை கொலை.. தாயும் உடந்தை.!
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா வி.ராமசாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டிதுரை (30), கலைச்செல்வி (27) தம்பதியரின் 9 மாதக் குழந்தை கடந்த மாதம் 8-ஆம் தேதி வீட்டில் இருந்த தண்ணீர் பாத்திரத்தில் விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. இச்சம்பவத்தில் குழந்தையின் மரணத்தில் சந்தேகம்…
Read more