மதுரை மாவட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ராஜாகாந்தி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது, கொட்டாம்பட்டி துணை மின்நிலையத்தில் இன்று(ஜன-24) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதனால் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகின்றது.

அவை,கொட்டாம்பட்டி துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட கொட்டாம்பட்டி, பொட்டப்பட்டி,  சின்னகொட்டாம்பட்டி, மணப்பச்சேரி, வெள்ளினிப்பட்டி, வெ.புதூர், தொந்திலிங்கபுரம், பள்ளபட்டி, புதுப்பட்டி, சொக்கம்பட்டி,  காடம்பட்டி, அய்யாபட்டி, ஓட்டக்கோவில்பட்டி, வெள்ளிமலைமுடுக்கன்காடு, கருங்காலக்குடி, மங்களாம்பட்டி, சொக்கலிங்கபுரம், மணல்மேட்டுப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.