கலைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மன்னார்புரம் ரெக்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் பெண்ணியம் காப்போம் தின விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கிடையே கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்பட்டது.

இந்த போட்டிகளில் மேரி இம்மாகுலேட் மெட்ரிக் மேல்நிலைப் மாணவர்கள் பங்கேற்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்து சாதனை படைத்தார்கள். இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளியின் தாளாளரும் முதல்வருமான அந்தோணி விஜயன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.