சென்னையில் இன்று ஒரு பள்ளி நிகழ்ச்சியில் மேயர் பிரியா மற்றும் திருவிக நகர் எம்எல்ஏ பல்லவி ஆகியோர் கலந்து கொண்ட போது முகம் சுளிக்கும் வகையில் பல நிகழ்ச்சியில் அரங்கேறியது. அதாவது குத்து விளக்கு ஏற்றும் போது மேயர் பிரியா மெழுகுவர்த்தியை எம்எல்ஏ பல்லவியிடம் கொடுக்காமல் அடுத்தடுத்து வேறு சிலரிடம் கொடுத்ததால் சர்ச்சை எழுந்த நிலையில் பல்லவி அந்த இடத்தை விட்டு உடனடியாக விலகினார். இது குறித்து கேட்டபோது நான் முதலில் விளக்கேற்றனும் அதன் பிறகு ஐஏஎஸ் அதிகாரி அதன் பிறகு தான் எம்எல்ஏ விளக்கேற்றுவது மரபு என்று கூறிவிட்டு உடனடியாக கிளம்பினார். ஆனால் எம்எல்ஏ பல்லவியோ இது பள்ளி நிகழ்ச்சி என்பதால் பிரச்சினை செய்ய வேண்டாம் விட்டுக் கொடுத்தால் நாங்கள் கெட்டுப் போக மாட்டோம் என்று கூறினார்.
இது தொடர்பாக தற்போது விளக்கம் கொடுத்துள்ள எம்எல்ஏ பல்லவி முதலில் எனக்கு தான் ஸ்கூல் திறப்பிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டது மேயர் பிரியா கடைசிவரை நிகழ்ச்சிக்கு வருவதை உறுதிப்படுத்தவில்லை. ஆனால் நான் வருவதை அறிந்து வேண்டுமென்றே என்னை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக அங்கு வந்தார். அவர் மற்றும் அவருடைய ஆதரவாளர்களையும் ரிப்பன் வெட்டும் போது முன்னிறுத்திய நிலையில் குத்துவிளக்கு ஏற்றும் போது அங்கிருந்தவர்கள் என்னிடம் கொடுக்க சொன்ன பிறகும் பிரியா என்னிடம் கொடுக்காமல் மற்றவர்களிடம் கொடுத்ததாக கூறினார். மேலும் பள்ளி நிகழ்ச்சி என்பதால் பிரச்சினை செய்ய வேண்டாம் என்பதற்காகவே தான் அந்த இடத்தில் இருந்து அமைதியாக விலகியதாகவும் கூறினார். மேலும் மேயர் பிரியாவின் செயல் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழக வெற்றி கழகத்தினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
”இன்னைக்கு அவங்க வர ப்ளாணே இல்ல.. என்ன இன்சல்ட் பண்றதுக்காகவே நிகழ்ச்சிக்கு வந்திருக்காங்க”… திருவிக நகர் பள்ளி திறப்பு நிகழ்ச்சியில் குத்துவிளக்கு ஏற்றும் போது மேயர் பிரியாவுடன் நடந்தது குறித்து த.வெ.க எம்.எல்.ஏ. பல்லவி விளக்கம்#Chennai | #TVK | #MayorPriya | #MLAPallavi |… pic.twitter.com/Dzb2zgzKR8
— Polimer News (@polimernews) June 4, 2026
