தூத்துக்குடியில் புதுபெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள லயன்ஸ் டவுன் ஏழாவது தெருவை சேர்ந்த பிரசாந்த் என்பவருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எம்பரர் தெருவை சேர்ந்த அனுஷா என்பவருக்கும் சென்ற வருடம் ஜனவரி 20ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. பிரசாத் குவைத் நாட்டில் வேலை செய்து வருவதால் தனது மனைவியை பெற்றோரிடம் விட்டுவிட்டு குவைத்துக்கு சென்று விட்டார். இதனிடையே அனுஷாவின் பெற்றோர் வாரத்திற்கு ஒருமுறையாவது தங்களது மகளை தங்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டு இருக்கின்றார்கள்.

ஆனால் பிரசாத்தின் பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்து விட்டார்கள். இதனால் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்லும் போது மகளை சந்தித்து வந்துள்ளார்கள். இந்த நிலையில் சென்ற புத்தாண்டை முன்னிட்டு பிரசாந்த் சில நாட்களுக்கு முன்பாக ஊருக்கு வந்திருக்கின்றார். அவரும் அனுஷாவை பெற்றோரை பார்ப்பதற்காக அனுப்பவில்லை என சொல்லப்படுகின்றது. இந்த நிலையில் பிரசாத்தின் உறவினர் ஒருவர் நேற்று முன்தினம் மாலை அனுஷாவின் தாயாரை தொடர்பு கொண்டு உங்களது மகள் தூக்கு போட்டுக் கொண்டதால் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றார்கள் என தெரிவித்துள்ளார்.

இதனால் பதறிப்போன அனுஷாவின் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு சென்றார்கள். அப்போது அங்கிருந்தவர்கள் அனுஷா உயிரிழந்ததால் அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருப்பதாக கூறினார்கள். இதனால் அவர்கள் கதறிகதறி அழுதனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். திருமணமாகி ஒரு வருடமே ஆன நிலையில் புது பெண் தற்கொலை செய்து கொண்டதால் தூத்துக்குடி உதவிய ஆட்சியர் மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை செய்தார்.

அப்போது அனுஷாவின் உறவினர்கள் மருத்துவமனையில் திரண்டனர். மேலும் அனுஷா தற்கொலை செய்யவில்லை எனவும் அவரை கொலை செய்து விட்டார்கள் எனவும் அவரின் இறப்புக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதன்பின் அவர்களிடம் உதவி ஆட்சியர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள். இது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.