
சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீராம் பேட்டையில் வசித்து வந்தவர் 27 வயது இளைஞர் கௌதம். பல வழக்குகளில் குற்றவாளியான இவரை 6 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து சரமாரியாக வெட்டி சாய்த்துள்ளது. இதுகுறித்த தகவரிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இளைஞரின் மனைவியிடம் போலீசாரிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், ஆட்டோ ஓட்டுநரான கௌதம், ராஜ்கிரண் என்பவருடன் நட்பாக பழகிவந்துள்ளார்.
இந்நிலையில் ராஜ்கிரண் மனைவி பிரியாவுடன் அவருக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரியா தனது குழந்தைகளுடன் கௌதம் வீட்டிற்கு சென்றுவிட்டார். அதன் காரணமாக தான் இந்த கொலை நடந்துள்ளதாக பிரியா தெரிவித்துள்ளார்.