மே 18 ஆன இன்று இந்தியாவே எதிர்பார்க்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணியின் சூடு பறக்கும் ஆட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பெறும். அதிலும், ஆர்சிபி அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அல்லது 18.1 ஓவர்களுக்குள் ஆட்டத்தை வென்றால் மட்டுமே அவர்கள் உள்ளே நுழைவதற்கான வாய்ப்பு அதிகம். இந்நிலையில் போட்டி குறித்து பல தகவல்கள் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இது அவ்வளவு சாதாரணமான காரியம் அல்ல.

போட்டி நடைபெற உள்ள இடம் பெங்களூரு சின்னசாமி மைதானம். இந்த மைதானத்தில் பெரும்பாலான போட்டிகளில் 200 ரன்களுக்கு மேல் அடிப்பது எளிதான காரணமாக இருந்திருப்பதை பார்த்திருப்போம். ஒரு வேளை சிஎஸ்கே முதல் பேட்டிங் எடுத்து 210 ரன்களுக்கு மேல் எடுத்தால் ஆர் சி பி அதை 18.1 ஓவருக்குள் முடிப்பதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியதாக இருக்கும்.

அதே போல ஆர் சி பி அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து 200 ரன்களுக்கும் குறைவாக இலக்கை நிர்ணயித்தால் அடுத்த பேட்டிங் செய்யக்கூடிய சி எஸ் கே அணியை 18.1 ஓவர் அல்லது 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது என்பது சந்தேகத்திற்குரிய ஒன்றுதான். முதலில் சிஎஸ்கே பேட்டிங் செய்து 150 ரன்கள் முதல் 200 ரன்களுக்குள் முடக்கி விட்டால் ஆர் சி பி அதனை விரைவாக chase செய்து வெற்றி பெற்றால் மட்டுமே தகுதி பெற முடியும் என்ற நிலை உள்ளதாக கிரிக்கெட் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இந்த குறிப்பிட்ட ஓவர்களுக்குள் ஆர் சி பி ஐ கொண்டு வராமல் தடுப்பதற்கு ஏற்ற அழுத்தத்தை கொடுத்தாலே சிஎஸ்கே தோற்றாலும் எளிதாக பிளே ஆப் சுற்றிற்கு சென்று விடும் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.