2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள வலங்கைமான் அருகே இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 47 வயதான ஒருவருக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர். குடும்ப பிரச்சனை காரணமாக இவரின் மனைவி அவரை விட்டு சென்று விட்டார். இதன் காரணமாக 7 வயது மகள், 13 வயது மாற்றுத்திறனாளி மகள் உள்ளிட்டோரை தந்தை வளர்த்து வருகின்றார். மற்றொரு மகள் மற்றும் மகனை தாய் வழி தாத்தா-பாட்டி வளர்த்து வருகின்றார்கள்.

இந்த நிலையில் 7 வயது மகளுக்கும் 13 வயது மாற்றுத்திறனாளி மகளுக்கும் தந்தை மற்றும் சிறுமிகளின் அத்தை கணவர், எதிர் வீட்டு முதியவர் என மூன்று பேர் சென்ற ஒரு மாதமாக பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கின்றார்கள். இது பற்றி போலீசார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்து இரண்டு சிறுமிகளையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதுபற்றி வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் 3 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.