கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு உதவி ஆட்சியரின் தொடர் ஊழியர் விரோத போக்கை எதிர்த்தும் வட்ட கிளை உறுப்பினர் பச்சையப்பினை எந்தவித உகாந்தினமும் இல்லாமல் பணியிட மாறுதல் செய்ததற்கும் அதனை ரத்து செய்யக் கோரியும் செய்யாறு, வந்தவாசி, சேத்துப்பட்டு, வெம்பாக்கம் உள்ளிட்ட தாலுகாவை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இவர்கள் சென்ற 31ஆம் தேதி இணையதளம் தொடர்பான பணிகளை புறக்கணித்தும் நேற்று முன்தினம் 262 கிராம நிர்வாக அலுவலர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்தும் நேற்று உதவி ஆட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த நிலையில் இன்றும் செய்யாறு கோட்டளவிலான கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதை தொடர்ந்து நாளை திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் விடுப்பு எடுத்து செய்யாறில் இருக்கும் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் கூறியுள்ளார்.